

என்னை உயர்த்துகிறீர்கள்; நல்ல நிலைமைக்கு வாருங்கள் என்று தனது அறக்கட்டளை மூலம் படித்து வரும் மாணவர்களுக்கு விஷால் அறிவுரை வழங்கியுள்ளார்.
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான படம் 'ஆக்ஷன்'. இந்தப் படத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து 'சக்ரா' மற்றும் ’துப்பறிவாளன் 2’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால்.
படங்களில் நடித்துக்கொண்டே, பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து வருகிறார் விஷால். இதில் தேவி அறக்கட்டளை மூலம் மாணவர்களைப் படிக்க வைத்து வருகிறார். இதில் 12-ம் வகுப்பு முடித்து, மேற்படிப்பு தொடர முடியாத ஏழை மாணவர்கள் படிக்க உதவிகள் செய்து வருகிறார்.
இதனிடையே, தேவி அறக்கட்டளை மூலம் படித்து வரும் மாணவர்களை விஷால் சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, "நீங்கள் என்னை உயர்த்துகிறீர்கள். அது ஒரு சிறிய முயற்சி தான். இந்த தேவி அறக்கட்டளையின் உதவிகள் மூலம் நீங்கள் படித்து நல்ல நிலைமைக்கு வாருங்கள். நீங்களும் மற்றவர்களுக்கு உங்களால் முடிந்த கல்வி உதவியைச் செய்யுங்கள்” என்று பேசினார் விஷால்.