

சற்குணம் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் 'சண்டி வீரன்' படத்துக்கு சிங்கப்பூர் தணிக்கை குழு தடை விதித்திருக்கிறது.
சற்குணம் இயக்கத்தில் அதர்வா, ஆனந்தி, லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆகஸ்ட் 7ம் தேதி வெளியாகி இருக்கும் படம் 'சண்டி வீரன்'. பாலா தயாரித்திருந்த இப்படத்தை ஸ்ரீ க்ரீன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.
இப்படத்துக்கு சிங்கப்பூர் தணிக்கை குழு தடை விதித்திருக்கிறது. 'சண்டி வீரன்' படத்தை பார்வையிட்ட சிங்கப்பூர் தணிக்கை குழு, அங்குள்ள காவல் துறையினரால் நிறைவேற்றப்படும் தண்டனையான 'ரோத்தா' என்ற தண்டனையை படத்தில் காட்டப்பட்டு இருப்பதால் தடை விதித்திருக்கிறார்கள்.