'தர்பார்' குறித்த எதிர்மறைக் கருத்துகள்: லாரன்ஸ் கிண்டல்

'தர்பார்' குறித்த எதிர்மறைக் கருத்துகள்: லாரன்ஸ் கிண்டல்
Updated on
1 min read

'தர்பார்' குறித்த எதிர்மறைக் கருத்துகளைப் பரப்பியவர்களை லாரன்ஸ் தனது ட்விட்டர் பதிவில் கிண்டல் செய்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'தர்பார்'. லைகா நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள இந்தப் படம் ஜனவரி 9-ம் தேதி வெளியானது. இதில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், மக்கள் மத்தியில் இந்தப் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. தற்போது இந்தப் படத்துக்கு எதிராக தகவல்கள் பரப்பியவர்களைக் கிண்டல் செய்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள கடிதத்தில் லாரன்ஸ், "நண்பர்களே, ரசிகர்களே. ஒரு சிலர் தலைவரின் படம் வெற்றிகரமாக ஓடாது என்று நினைத்தார்கள். குறிப்பாக ஒரு நபர் நிறைய விஷயங்களைத் திட்டமிட்டிருந்தார்.

வாட்ஸ் அப்பில் இந்தப் படத்துக்குப் போக வேண்டாம் என்று கூட குறிப்பிட்டார். ஆனால், எல்லாவற்றையும் தாண்டி தலைவரின் படம் மாபெரும் வசூல் பெற்றுள்ளது. இலையைக் கையில் மறைக்கலாம். ஆனால், மலையை மறைக்க முடியாது. மலை டா, அண்ணாமலை. அந்த ஆண்டவனே நம்ம பக்கம்" என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in