'பட்டாஸ்' படத்தின் முதல் நாள் வசூல் அறிவிப்பு

'பட்டாஸ்' படத்தின் முதல் நாள் வசூல் அறிவிப்பு
Updated on
1 min read

தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'பட்டாஸ்' படத்தின் முதல் நாள் வசூல் நிலவரத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், சினேகா, நவீன் சந்திரா, மெஹ்ரீன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பட்டாஸ்'. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர். பொங்கல் வெளியீடாக நேற்று (ஜனவரி 15) 'பட்டாஸ்' வெளியானது.

இந்தப் படத்துக்குக் கலவையான விமர்சனங்கள் வந்தாலும், பண்டிகைக் காலம் என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. தற்போது இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரத்தைப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாகவே வெளியிட்டுள்ளனர்.

முதல் நாளில் 6.5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதைப் படக்குழு உறுதி செய்துள்ளது. 'அசுரன்' படத்தின் பிரம்மாண்ட வெற்றி, பொங்கல் விடுமுறை ஆகியவற்றைக் கொண்டு முதல் நாளில் இந்த அளவுக்கு வசூல் செய்துள்ளது 'பட்டாஸ்'.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in