

'கண்ணே கலைமானே' படத்துக்கு எந்தவொரு விருதுமே கிடைக்காதது குறித்து இயக்குநர் சீனு ராமசாமி கவலை தெரிவித்துள்ளார்.
2019-ம் ஆண்டு வெளியான படங்களிலிருந்து சிறந்த நடிகர், சிறந்த படம், சிறந்த இசையமைப்பாளர் பல பல்வேறு குழுமத்திலிருந்து தேர்வு பட்டியல் அறிவித்துவிட்டார்கள். இதில் சிலர் பிரம்மாண்டமாக விருது விழாவையும் நடத்தி முடித்துவிட்டார்கள்.
இதில், சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான 'கண்ணே கலைமானே' படத்துக்கு எந்தவொரு விருதுமே கிடைக்கவில்லை. உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் விமர்சன ரீதியில் வரவேற்உ கிடைத்தாலும், வசூல் ரீதியில் சோபிக்கவில்லை.
'கண்ணே கலைமானே' படம் விருது விழாக்களில் புறக்கணிக்கப்பட்டது தொடர்பாக இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பதிவில், "பெரும்பாலான காட்சி, அச்சு ஊடகங்களின் விமர்சன ரீதியான வரவேற்பைப் பெற்ற 'கண்ணே கலைமானே' திரைப்படம் சில உள்ளூர் ஊடகங்களின் விருதுகளுக்கு மட்டும் பரிசீலிக்கப்படாமல் போனது யூகிக்க முடியாத கவலையைத் தருகிறது" என்று தெரிவித்துள்ளார்.