விருதுக் குழுக்களைச் சாடிய ஷான் ரோல்டன்

விருதுக் குழுக்களைச் சாடிய ஷான் ரோல்டன்
Updated on
1 min read

விருதுகள் வழங்கும் குழுவினரைச் சாடியுள்ளார் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்.

2019-ம் ஆண்டுக்கான சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இசையமைப்பாளர் என பல்வேறு குழுமங்களும் தங்களுடைய தேர்வை அறிவித்துவிட்டார்கள். சிலர் விருது வழங்கும் விழாவும் நடத்தி முடித்துவிட்டார்கள்.

இதில், 'மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் இசைக்கு எந்தவொரு விருதுமே கொடுக்கவில்லை. மேலும், பாடல்கள் தொடர்பாகவும் விருதுகள் இல்லை. ஆனால், இந்தப் படத்தின் பாடல்கள் இசை விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

இது தொடர்பாக ஷான் ரோல்டன் தனது ட்விட்டர் பதிவில், "இந்த வருடம் எந்த பெரிய விருதுகளுக்கும் சிறந்த இசைப் பிரிவில் 'மெஹந்தி சர்க்கஸ்' பரிந்துரை செய்யப்படாதது எனக்கு ஒரு விஷயத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. இசை ரசிகர்களுக்கு, விருதுக் குழுக்களை விட நல்ல ரசனை இருக்கிறது. 2020 அன்போடும், இசை ரசிகர்களின் ஆதரவோடும் தொடங்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

2019-ம் ஆண்டு ஷான் ரோல்டன் இசையில் 'மெஹந்தி சர்க்கஸ்', 'ராட்சசி' ஆகிய படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in