

ஆர்யா, அனுஷ்கா நடித்துவரும் 'இஞ்சி இடுப்பழகி' படத்தின் மூலம் பாடகராக அறிமுகமாக இருக்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்
பிரகாஷ் கோவலமுடி இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடித்து வரும் படம் 'இஞ்சி இடுப்பழகி'. 'சைஸ் ஜீரோ' என்ற பெயரில் தெலுங்கிலும் தயாராகும் இப்படத்தை பி.வி.பி சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துவரும் இப்படத்துக்கு மரகதமணி இசையமைத்து வருகிறார்.
செப்டம்பரில் இசை வெளியீடு முடிந்து, அக்டோபரில் படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டது.
இப்படத்துக்காக மதன் கார்க்கி எழுதியிருக்கும் ஒரு பாடலை நடிகர் பிரகாஷ்ராஜ் பாடியிருக்கிறார். இப்பாடல் பதிவு சமீபத்தில் முடிந்திருக்கிறது. பிரகாஷ்ராஜ் முதன் முறையாக பாடகராக 'இஞ்சி இடுப்பழகி' மூலம் அறிமுகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.