

’பம்மல் கே சம்பந்தம்’, ’நள தமயந்தி’ உள்ளிட்ட படங்களில் கமல்ஹாசனுடன் பணியாற்றிய இயக்குநர் மற்றும் நடிகர் மௌலி தற்போது மீண்டும் கமலுடன் இணையலாம் என்று தெரிகிறது.
அண்மையில் இருவரும் சந்தித்து புதிய படம் குறித்து பேசியதாகவும், மௌலி சொன்ன கதை கமலுக்கு பிடித்ததாகவும் கமலுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் தெரிவித்தார். ஆனால் இன்னும் எதுவும் இறுதியாகவில்லை, கமல் தனது இறுதி முடிவினை தெரிவிக்கவில்லை.
தற்போது 'தூங்காவனம்' படத்தின் டப்பிங் வேலைகளில் இருக்கும் கமல், அடுத்து சைஃப் அலி கான் நடிக்கும் 'அமர் ஹை' என்ற பாலிவுட் படத்தை இயக்குகிறார்