பட்டையக் கிளப்பும் 'பட்டாஸ்' ட்ரெய்லர்; அடிவரிசைக் கலை பற்றி தெரியுமா? 

பட்டையக் கிளப்பும் 'பட்டாஸ்' ட்ரெய்லர்; அடிவரிசைக் கலை பற்றி தெரியுமா? 
Updated on
1 min read

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'பட்டாஸ்' படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

'எதிர்நீச்சல்', 'காக்கிசட்டை', 'கொடி' படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் தனுஷ், சினேகா நடிப்பில் 'பட்டாஸ்' படத்தை இயக்கியுள்ளார். நாசர், முனீஷ்காந்த், மெஹ்ரின் ப்ரிஸடா ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.

ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு, விவேக்- மெர்வினின் இசை, பிரகாஷ் மப்புவின் படத்தொகுப்பு, துரைராஜின் கலை இயக்கம், திலீப் சுப்புராயனின் சண்டைப் பயிற்சி என படம் கலர்ஃபுல்லாக உருவாகியுள்ளதை ட்ரெய்லரில் பார்க்க முடிகிறது.

தற்காப்புக் கலையான அடிவரிசைக் கலை குறித்து 'பட்டாஸ்' படத்தில் சொல்லப்படுகிறது. சிறிய கம்புகளை வைத்து சண்டை செய்யும் சில்தா கம்பு முறையே அடிவரிசைக் கலை என்று அழைக்கப்படுகிறது. சிலம்பக் கலையில் குத்துவரிசை, தட்டு வரிசை, பிடி வரிசை என ஏராளமான பிரிவுகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் அடிவரிசைக் கலை.

''நமக்கு எது நல்லதுங்கிறது நம்ம மண்ணுக்குத்தான் தெரியும், நம்ம மண்ணோட ஈரத்தைக் காயாம காப்பாத்தி அடுத்த தலைமுறைக்கு கொண்டுபோய் சேர்க்குறது நம்ம கடமை இல்லையா'', ''பேருக்குப் பின்னாடி அப்பன் பேர் போட்டுகிறது மட்டும் புள்ளைக்கு பெருமை இல்லடா... அந்தப் பேர காப்பாத்ரா மாதிரி நடந்துக்கணும்'' போன்ற வசனங்கள் படத்துக்கும் தனுஷுக்கும் அடிவரிசைக் கலைக்கும் பொருத்தமாக இருப்பதால் 'பட்டாஸ்' ட்ரெய்லர் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தனுஷ் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அப்பா தனுஷ் இதில் அடிவரிசைக் கலை வீரராகவும், அதைக் கற்றுத் தரும் பயிற்சியாளராகவும் நடித்துள்ளார்.

'பட்டாஸ்' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 16-ம் தேதி வெளியாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in