

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மதிய நேரத்தில் ஒளிபரப்பாகிறது ‘இரட்டை ரோஜா’ தொடர். இது நாளை (திங்கள்) 100-வது அத்தியாயத்தை தொடுகிறது.
இத்தொடரில் அபி - அனு என்ற இரட்டை கதாபாத்திரத்தில் ஷிவானி நடிக்கிறார். அக்ஷய் சபிதா ஆனந்த், மோனிகா, மீனா, தமிழ்செல்வி, பூவிலங்கு மோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். புங்கராஜ் திரைக்கதை எழுத, நந்தகுமார் இயக்குகிறார். ஸ்ருதி ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.
சஞ்சீவ் - அபி காதல் அனுவுக்கு தெரிகிறது. தன் சகோதரி அபி போல சென்று, சஞ்சீவ் மற்றும் அவனது குடும்பத்தினரை தரக்குறைவாக பேசி அவர்களை கோபப்படுத்துகிறார் அனு.
இதனால், ஸ்ரீஜாவை மணமுடிக்க முடிவு செய்கிறார் சஞ்சீவ். உண்மையில் சஞ்சீவுக்கு யாருடன் திருமணம் நிச்சயமாகிறது என்ற விறுவிறுப்பான காட்சிகள் வரும் வாரங்களில் வருகின்றன.