அமிதாப் பச்சனுடன் விஜய்யை ஒப்பிட்டு புகழாரம் சூட்டிய ப்ரித்விராஜ்

அமிதாப் பச்சனுடன் விஜய்யை ஒப்பிட்டு புகழாரம் சூட்டிய ப்ரித்விராஜ்
Updated on
1 min read

அமிதாப் பச்சனுடன் விஜய்யை ஒப்பிட்டு புகழாரம் சூட்டிய ப்ரித்விராஜ்.

லால் ஜுனியர் இயக்கத்தில் ப்ரித்விராஜ், சுரஜ், மியா ஜார்ஜ், தீப்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள மலையாளப் படம் 'டிரைவிங் லைசன்ஸ்'. நடிகருக்கும் அவரது ரசிகருக்கும் இடையே நிகழும் கதையே இந்தப் படம். இதனை விளம்பரப்படுத்த தன் ரசிகர்களைச் சந்தித்து, அவர்களுடைய கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார் ப்ரித்விராஜ்.

இந்த நிகழ்வில் ரசிகர் ஒருவர் விஜய் குறித்து ப்ரித்விராஜிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ப்ரித்விராஜ் அளித்துள்ள பதில் தான் தற்போதைய ட்விட்டர் ட்ரெண்டாக இருக்கிறது. இதனை விஜய் ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

விஜய் குறித்து ப்ரித்விராஜ் கூறியதாவது:

''நான் பல முறை விஜய் சாரைப் பார்த்திருக்கிறேன். பேசியிருக்கிறேன். இந்தியாவின் மிகப் பெரிய நடிகர் அவர். அதாவது தமிழில் மட்டுமல்ல, இந்திய அளவில் பெரிய நடிகர். அவர் படங்கள் அந்த அளவுக்கு வருமானம் ஈட்டுகின்றன. அவருடைய சினிமா வெளிவரும்போது தமிழ் சினிமா வியாபாரமும் வளர்ந்துகொண்டிருக்கிறது.

தமிழ் சினிமா வியாபாரத்தின் ஒரு முக்கியமான கண்ணி, விஜய் சார். ஒரு பெரிய நடிகராகவும் சூப்பர் ஸ்டாராகவும் கடந்த சில ஆண்டுகளாக அவரின் வளர்ச்சி என்னைக் கவரக்கூடிய விஷயமாக இருக்கிறது. தன்னுடைய இடம் என்ன, என்பதைத் தெளிவாக அறிந்து தன் சினிமாக்களைத் தேர்ந்தெடுத்துச் செய்வதில் மிகத் திறமையானவர் அவர்.

அதிகம் பேசாதவர் என்றாலும் star charisma (ஈர்க்கக்கூடிய ஆளுமை) உள்ளவர் அவர். அமிதாப் பச்சன் யார் என்று தெரியாதவர் இருக்கும் ஒரு சபையில் அமிதாப் பச்சன் வந்தாலும் நாம் எழுந்து நிற்கக்கூடும். அதுதான் star charisma. அது விஜய்க்கு உண்டு''.

இவ்வாறு ப்ரித்விராஜ் பேசியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in