

டி.கே இயக்கத்தில் ஜீவா நடிக்கவிருக்கும் 'கவலை வேண்டாம்' படத்திலிருந்து தேதிகள் குளறுபடியால் கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டு இருக்கிறார்.
'கோ', 'யான்' ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஆர்.எஸ் இன்ஃபோடையின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் ஜீவா. 'யாமிருக்க பயமே' இயக்குநர் டி.கே இயக்கவிருக்கும் இப்படத்துக்கு 'கவலை வேண்டாம்' என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.
படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஜீவா மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் பங்கேற்ற போட்டோ ஷூட் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில், படத்தின் படப்பிடிப்புக்கான தேதிகள் குளறுபடியால் தற்போது கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டு இருக்கிறார். விரைவில் புதிய நாயகி ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்