

முன்னணி சீரியல் நடிகை ஸ்ரீத்திகா - ஷானீஷ் திருமணம் டிசம்பர் 30-ம் தேதி கேரளாவில் நடைபெற்றுள்ளது.
2002-ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மெட்டி ஒலி' சீரியல் மூலமாக அறிமுகமானவர் ஸ்ரீத்திகா ஸ்ரீ. அந்தச் சீரியல் அவரைத் தொலைக்காட்சி தொடர் நடிகர்கள் வரிசையில் முக்கியமானவராக வலம்வர வைத்தது.
'மெட்டி ஒலி' சீரியலைத் தொடர்ந்து 'கலசம்', 'கோகுலத்தில் சீதை', 'நாதஸ்வரம்', 'மாமியார் தேவை', 'உயிர்மை', 'குலதெய்வம்', 'கல்யாண பரிசு' என பல்வேறு சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், 'வெண்ணிலா கபடி குழு', 'மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி', 'வேங்கை' உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவரது குடும்பத்தினர், நீண்ட நாட்களாகவே இவருக்கு மாப்பிள்ளை தேடி வந்தனர். இறுதியாக கேரளாவைச் சேர்ந்த ஷானீஷுக்கும் இவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. டிசம்பர் 30-ம் தேதி இரண்டு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த திருமண வைபவத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
தனக்கு ஷானீஷ் உடன் திருமணம் முடிந்துள்ளதை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிச் செய்துள்ளார் ஸ்ரீத்திகா