கரம்கோர்த்துக் களமாடும் ஆண்டு: கமல்ஹாசன் புத்தாண்டு வாழ்த்து

கரம்கோர்த்துக் களமாடும் ஆண்டு: கமல்ஹாசன் புத்தாண்டு வாழ்த்து
Updated on
1 min read

‘கரம்கோர்த்துக் களமாடும் ஆண்டு’ என கமல்ஹாசன் தன்னுடைய புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இன்று (ஜனவரி 1) ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துகளை மக்களுக்குத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தன்னுடைய புத்தாண்டு வாழ்த்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

அதில், “கைகுலுக்கி வாழ்த்து பரிமாறும் ஆண்டு மட்டுமல்ல, கரம்கோர்த்துக் களமாடும் ஆண்டு. நீ, நான், நாம் என அனைவரும் இணைந்து களமாடினால், பாரதி சொன்னதுபோல வான்புகழ் கொண்ட தமிழகமாக மீண்டும் ஆக்கலாம்.

இன்று தொடங்குவது புத்தாண்டு மட்டுமல்ல. நம் வெற்றிப்பயணமும்தான். நாளை நமதே. புத்தாண்டு வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுவரும் அதேசமயம், சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார் கமல்ஹாசன். ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in