இரண்டு நாயகிகளுடன் தனுஷ்

இரண்டு நாயகிகளுடன் தனுஷ்
Updated on
1 min read

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்தில் அவருக்கு இரண்டு நாயகிகள் என்பது தெளிவாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் தனுஷுக்குத் திருமணம் நடைபெறுவது போலவும், அந்தத் திருமணத்துக்கு நடனமாடிக் கொண்டே வருவது போலவும் படமாக்கியுள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதை வைத்துப் பார்க்கும் போது தனுஷுக்கு மனைவியாக சஞ்சனா நடராஜன் நடித்துள்ளார். இவர் விஜய் தேவரகொண்டா நடித்த 'நோட்டா' படத்தில் நடித்தவர் என்பது நினைவுகூரத்தக்கது.

இன்னொரு நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். 24-ம் தேதியுடன் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் என படக்குழு அறிவித்துள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை 'தனுஷ்40' என அழைத்து வருகிறார்கள். இதில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லிஜோ ஜார்ஜ், கலையரசன், அஸ்வந்த் உள்ளிட்ட பலர் தனுஷுடன் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in