சினிமா நிகழ்ச்சியில் வேண்டாமே: ஜாமியா போராட்டக் கேள்வியைத் தவிர்த்த ரஜினி

சினிமா நிகழ்ச்சியில் வேண்டாமே: ஜாமியா போராட்டக் கேள்வியைத் தவிர்த்த ரஜினி
Updated on
1 min read

சினிமா நிகழ்ச்சியில் ஜாமியா போராட்டம் குறிததுப் பேச வேண்டாம் என்று அந்தக் கேள்வியைத் தவிர்த்துவிட்டார் ரஜினி.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தர்பார்'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜனவரி 9-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, பிரதீக் பார்பர், நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார்.

நேற்று (டிசம்பர் 16) மாலை இந்தப் படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியிடப்பட்டது. அப்போது மும்பையில் 'தர்பார்' ட்ரெய்லர் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. இதில் ரஜினி, சுனில் ஷெட்டி, ஏ.ஆர்.முருகதாஸ், சந்தோஷ் சிவன், பிரதீக் பார்பர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார் ரஜினி.

எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை?

நான் எல்லா விதமான கதைகளிலும் நடித்திருக்கிறேன். 160 படங்களில் நடித்துவிட்டேன். 40-45 வருடங்கள் துறையில் இருக்கிறேன். இருந்தாலும் ஒரு திருநங்கையாக நடிக்க எனக்கு ஆசை இருக்கிறது. இதுவரை அப்படியான கதைகள் எனக்கு வரவில்லை. இப்போதுதான் அந்த ஆசையை வெளியே சொல்லியிருக்கிறேன்.

நடந்துகொண்டிருக்கும் ஜாமியா போராட்டங்கள் பற்றி? குடியுரிமைச் சட்டத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இது சினிமா சம்பந்தமான நிகழ்ச்சி. இதில் அரசியலைக் கலக்க வேண்டாம் என்று விரும்புகிறேன். எனது பார்வையை நான் வேறொரு தளத்தில் வெளிப்படுத்துவேன்.

இவ்வாறு ரஜினி பதிலளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in