

கார்த்தி, துல்ஹர் சல்மான் நடிக்கும் படத்தில் பழிவாங்கலை முன்னிறுத்தும் விதமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் மணிரத்னம்.
'ஓ காதல் கண்மணி' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படப் பணிகளை உடனே துவங்கினார் இயக்குநர் மணிரத்னம். கார்த்தி, துல்ஹர் சல்மான், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இப்படத்தின் பணிகள் ஜனவரியில் இருந்து துவங்க இருக்கிறது. ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார்.
இப்படம் முழுக்க கேங்க்ஸ்டர் பாணியில் உள்ள படம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் படக்குழுவிடம் விசாரித்தபோது, "பழிவாங்கல் மட்டுமே தனி தீர்வு கிடையாது என்ற செய்தியை முன்னிறுத்தும் படமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் மணிரத்னம்.
முழுமையாக திரைக்கதை பணிகளும் முடித்துவிட்டன. ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கி 3 மாதங்களில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டு இருக்கிறோம்" என்று தெரிவித்தார்கள்.