ரஜினி பிறந்தநாள் உற்சாக கொண்டாட்டம்

ரஜினி பிறந்தநாள் உற்சாக கொண்டாட்டம்
Updated on
1 min read

சென்னை

ரஜினிகாந்தின் 70-வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் நேற்று மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினர்.

ரஜினிகாந்தின் பிறந்தநாள் நேற்று கொண்டா டப்பட்டது. இது 70-வது பிறந்தநாள் என்பதால் 10 நாட்களுக்கு முன்பு கடந்த 2-ம் தேதி குடும்பத்தின ருடன் அவர் பிறந்தநாள் கொண்டாடினார். தனுஷ், அனிருத் உள்ளிட்ட உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டனர்.

இதற்கிடையில், ‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. இதில் பேசிய ரஜினி, ‘‘எப்போதும்போல இந்த ஆண்டும் பிறந்தநாளன்று நான் ஊரில் இல்லை. ரசிகர்கள் யாரும் வீட்டுக்கு வந்து சிரமப்பட வேண்டாம். என் பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம். ஏழை மக்களுக்கு உதவி செய்யுங்கள்’’ என்று தெரிவித்தார்.

ஆனாலும், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீடு முன்பு ஏராளமான ரசிகர்கள் நேற்று திரண்டனர். லதா ரஜினி காந்த் ரசிகர்களை சந்தித்து இனிப்புகளை வழங்கினார்.

கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு ரஜினி சென்றுள்ளதாக கூறப்பட்டது. பிறந்தநாளன்று அதிகாலை முதலே ரஜினி தனிமையாக, தியானத்தில் இருப்பார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் ரஜினி ரசிகர்கள் நேற்று இனிப்புகள் வழங்கியும், ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், சிறப்பு வழிபாடுகள் செய்தும் உற்சாகமாக கொண்டாடினர்.

ஜப்பான், சீனா, துபாய், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள ரசிகர்களும் ரஜினி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி, சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். ஜப்பானில் 70 வகை கேக், தலை வாழை இலை விருந்து என ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டன. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ரஜினி மக்கள் மன்ற மாநில நிர்வாகி வி.எம்.சுதாகர், தயாரிப்பாளர்கள் கலைஞானம், கலைப் புலி எஸ்.தாணு, இயக்குநர்கள் எஸ்பி.முத்து ராமன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஸ்டாலின், கமல் வாழ்த்து

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘‘70-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் என் இனிய நண்பர் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல்நலம், மனநலத்துடனும், வளத்துடனும் மிக நீண்ட வாழ்க்கை வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தனது வாழ்த்துச் செய்தியில், ‘‘அன்பர், நண்பர் ரஜினிகாந்துக்கு நல் ஆரோக் கியமும், வெற்றியும் பல்லாண்டு தொடர இந்நாளில் வாழ்த்துகிறேன். உங்கள் நான்’’ என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in