'தலைவர் 168'  அப்டேட்: சதீஷ் ஒப்பந்தம்

'தலைவர் 168'  அப்டேட்: சதீஷ் ஒப்பந்தம்
Updated on
1 min read

ரஜினி நடிக்கும் ‘தலைவர் 168’படத்தின் பணிகள், பூஜையுடன் இன்று (டிசம்பர் 11) தொடங்கியுள்ளன. இந்நிலையில் நடிகர் சதீஷ் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு இமான் இசையமைக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இதில் ரஜினியுடன் நடிக்கவுள்ளவர்களை அதிகாரபூர்வமாக அறிவித்து வருகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இதுவரை மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, பிரகாஷ்ராஜ், சூரி ஆகியோர் நடிக்கவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.

தற்போது ரஜினியுடன் சதீஷ் நடிக்கவுள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ரஜினியுடன் நடிக்கவுள்ளது குறித்து சதீஷ் கூறுகையில், "இந்த நாள் என் வாழ்க்கையில் ரொம்ப ரொம்ப ஏங்கிக் கொண்டிருந்த நாள். அது நனவாகியுள்ளது. நான் திருமணத்தைப் பற்றிக் கூறவில்லை. ரஜினி சாருடன் நடிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக ஏங்கியுள்ளேன். அது இப்போது நடக்க உள்ளது. இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த ரஜினி சாருக்கும் சிவா சாருக்கும் சன் பிக்சர்ஸுக்கும் நன்றி. மறக்க முடியாத திருமணப் பரிசு இது" என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவாளராகவும், ரூபன் எடிட்டராகவும் பணிபுரியவுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in