விஜயகாந்த் மகனுக்கு விரைவில் திருமணம்: எளிமையான முறையில் நிச்சயதார்த்தம்

விஜயகாந்த் மகனுக்கு விரைவில் திருமணம்: எளிமையான முறையில் நிச்சயதார்த்தம்
Updated on
1 min read

விஜயகாந்த் மகன் விஜய பிரபகரானுக்கு கோவையில் எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

சினிமாவிலிருந்து முழுமையாக விலகி, தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார் விஜயகாந்த். இடையே உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவரால் பிரச்சாரம் செய்ய முடியவில்லை. இதனைத் தொடர்ந்து அவரது மூத்த மகனான விஜய பிரபாகரன், அப்பாவின் பணியைக் கையில் எடுத்து தேமுதிக கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்குச் சேகரித்து வந்தார்.

இந்நிலையில், விஜய பிரபாகரனுக்குக் கோவையில் மிக எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை. கோவை தொழிலதிபர் இளங்கோவின் மகள் கீர்த்தனாவுக்கும், விஜய பிரபாகரனுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் இரு குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட சிலர் மட்டுமே விஜயகாந்த் குடும்பத்திலிருந்து பங்கேற்றனர். இவர்களது திருமணம் எப்போது என்பது முடிவாகவில்லை. விரைவில் திருமணம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் திரையுலகில் நாயகனாக நடித்து வருகிறார். தற்போது அவரது நடிப்பில் 'மித்ரன்' என்ற படம் தயாராகி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in