Published : 06 Dec 2019 12:23 PM
Last Updated : 06 Dec 2019 12:23 PM

பொள்ளாச்சி வழக்கு குற்றவாளிகளின் நிலை? - வாசுகி பாஸ்கர் கேள்வி

பொள்ளாச்சி வழக்கு குற்றவாளிகளின் நிலை என்னவென்று ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து முகமது பாஷா, சிவா, நவீன் மற்றும் சென்ன கேசவலு ஆகியோரைக் கைது செய்தது காவல்துறை.

இன்று (டிசம்பர் 6) அதிகாலை குற்றவாளிகள் நால்வரும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். இதற்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும், ஹைதராபாத் காவல் துறையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இந்த வாழ்த்துகளுடன், தமிழ் இணைய ட்விட்டர்வாசிகள், பொள்ளாச்சி வழக்கு குற்றவாளிகள் தொடர்பாகவும் கருத்துகளைப் பதிவிடத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், ஹைதராபாத் என்கவுன்ட்டர் தொடர்பாக ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர் தனது ட்விட்டர் பதிவில், “இது தான்டா போலீஸ். சட்டம் என்பது மக்களுக்காக மக்களால் உருவாக்கப்பட்டது. இது மாதிரியான என்கவுன்ட்டர் தேவைதான். என்கவுன்ட்டர் பற்றிய செய்திகள் வந்துகொண்டிருக்கும் வேளையில் தமிழகத்தில் இருப்பவர்கள் யாருக்காவது பொள்ளாச்சி வழக்கின் குற்றவாளிகளின் நிலை என்னவென்று தெரியுமா?” என்று கேட்டுள்ளார்.

'தமிழ்ப் படம்', 'மங்காத்தா', 'சமர்', 'என்றென்றும் புன்னகை', 'ஆம்பள' உள்ளிட்ட பல படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராகப் பணிபுரிந்தவர் வாசுகி பாஸ்கர். இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் உறவினர் என்பது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x