Published : 03 Dec 2019 19:33 pm

Updated : 03 Dec 2019 20:45 pm

 

Published : 03 Dec 2019 07:33 PM
Last Updated : 03 Dec 2019 08:45 PM

தனது படங்களில் நேரடியாகவோ அழுத்தமாகவோ அரசியல் பேசாதது ஏன்? - இயக்குநர் மிஷ்கின் பதில்

mysskin-interview

தனது படங்களில் நேரடியாகவோ அழுத்தமாகவோ அரசியல் பேசாதது ஏன் என்ற கேள்விக்கு இயக்குநர் மிஷ்கின் பதிலளித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்கள் பலரும் அரசியல் நிகழ்வுகள், அரசியல்வாதிகள் பின்னணி உள்ளிட்டவற்றைப் பின்னணியாகக் கொண்டு கதைகள் பண்ணியிருப்பார்கள். ஆனால், மிஷ்கின் இயக்கத்தில் வெளியான எந்தவொரு படத்திலுமே அரசியலைத் தொடவே இல்லை.


இதுவரை 'சித்திரம் பேசுதடி', 'அஞ்சாதே', 'நந்தலாலா', 'யுத்தம் செய்', 'முகமூடி', 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', 'பிசாசு', 'துப்பறிவாளன்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார் மிஷ்கின். இதில் எந்தவொரு படத்திலுமே அரசியல் பின்னணி கிடையாது. தற்போது அவருடைய இயக்கத்தில் உருவாகியுள்ள 'சைக்கோ' படமும் அரசியல் பின்னணி கிடையாது.

தங்களுடைய படங்களில் நேரடியாகவோ அழுத்தமாகவோ அரசியல் பேசாதது ஏன் என்ற கேள்வியை இயக்குநர் மிஷ்கினிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

"மேலாக இருக்கும் அரசியலை என்றுமே நான் பேசுவது கிடையாது. ஒரு குடும்பத்தைத் துன்புறுத்தினால், நாங்கள் ஓடுவோம். ஒரு கட்டத்தில் கத்தியை எடுத்துத் திரும்ப வெட்டத் தொடங்கினால் என்ன ஆகும் என்று ’யுத்தம் செய்’ படத்தில் பேசினேன். அது பெரிய அரசியல்.

ஒரு சமுதாயம் பேய் இருக்கின்றது என்று தன் மகன்களிடம், மகள்களிடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கும் போது, பேய்கள் ஏன் தேவதைகளாக இருக்கக் கூடாது என ஒரு சமூகத்தையே தட்டிக் கேட்ட படம் ’பிசாசு’. அது ஒரு அரசியல் படம்.

என்னோட படங்கள் வேறொரு அரசியலைப் பேசுகிறது. மேலாக இருக்கும் அரசியலைப் பேசுவதில்லை. அதைச் சொல்வது ரொம்பவே போர். அதைச் சொல்ல நிறைய பேர் இருக்கிறார்கள்.

இன்று இதுதான் பேசு பொருள். இதை வைத்து ஒரு படம் பண்ணினால் தூள் பறக்கும் என்று நான் படம் பண்ணுவதே இல்லை. ஒரு மனிதனுக்குள்ளே இருக்கும் முக்கியமான பிரச்சினை என்ன, அதன் வலி என்ன, எப்படி விடுபடுவது போன்றவையே என் படங்கள் பேசும் அரசியல்.

சாதி அரசியல், மத அரசியலை எல்லாம் ஒரு காட்சியில் தொட்டுவிட்டுப் போய்க்கொண்டே இருப்பேன். இதற்காக ஒரு படம் பண்ணத் தெரியாது. எப்போதுமே மனிதர்கள் ஒரு படத்தைப் பார்த்து மாறுவதில்லை. இந்த உலகத்தில் திருக்குறளில் இல்லாத விஷயங்களா படத்தில் இருக்கப் போகிறது".

இவ்வாறு இயக்குநர் மிஷ்கின் பதில் அளித்தார்.


இயக்குநர் மிஷ்கின்மிஷ்கின் பேட்டிஅரசியல் பேசாதது ஏன்மிஷ்கின் விளக்கம்

You May Like

More From This Category

More From this Author