பொங்கலுக்கு வெளியாகும் சசிகுமாரின் 2 படங்கள்

பொங்கலுக்கு வெளியாகும் சசிகுமாரின் 2 படங்கள்
Updated on
1 min read

2020-ம் ஆண்டு பொங்கலுக்கு சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'ராஜவம்சம்' மற்றும் 'எம்ஜிஆர் மகன்' ஆகிய இரண்டு படங்கள் வெளியாக உள்ளன.

சசிகுமார் தனக்கு ஏற்பட்ட பண நெருக்கடியைச் சரி செய்ய, தொடர்ச்சியாகப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஒரு படத்தின் படப்பிடிப்பு முடித்த அடுத்த நாளே, அடுத்த படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினார். இதனால், அவருடைய நடிப்பில் படங்கள் குறித்த அறிவிப்பு தொடர்ச்சியாக வெளியான வண்ணம் இருந்தன.

2020-ம் ஆண்டு பொங்கல் விடுமுறைக்கு 'ராஜவம்சம்' மற்றும் 'எம்ஜிஆர் மகன்' ஆகிய இரண்டு படங்களுமே வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். புதுமுக இயக்குநர் கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி, தம்பி ராமையா, ராதாரவி, விஜயகுமார், சதீஷ், மனோபாலா, ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் 'ராஜவம்சம்' படத்தில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் படத்துக்குப் பிறகு பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சத்யராஜ், மிருணாளினி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'எம்ஜிஆர் மகன்'. ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பும் ஒரே கட்டமாக முடிவடைந்தது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டபோது அதில், 'பொங்கல் 2020 வெளியீடு' என்று அறிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பின் மூலம் சசிகுமாரின் 2 படங்களுமே, பொங்கல் வெளியீடு என்பது உறுதியாகியுள்ளது. மேலும், 'தர்பார்', 'சுமோ', 'பட்டாஸ்', 'பொன் மாணிக்கவேல்' உள்ளிட்ட படங்களும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள 'கொம்பு வச்ச சிங்கம்டா' படமும் ஜனவரி வெளியீடு என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in