Published : 30 Nov 2019 12:57 PM
Last Updated : 30 Nov 2019 12:57 PM

சின்னத்திரையோரம்: எல்லை கடந்த ரசிகர்கள்!

சன் மியூசிக் சேனலில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் நிவேதிதா, 8-வது ஆண்டாக சேனலில் அசத்தும் தொகுப்பாளினி என்கிற பட்டத்தை தட்டிச் சென்றிருக்கிறார். ‘‘முன்பெல்லாம் சன் மியூசிக்கில் 6 தொகுப்பாளினிகள் இருந்தால், மாறி மாறி நிகழ்ச்சிகளை வழங்குவோம்.

இப்போது ஒவ்வொருவருக்கும் தனி நிகழ்ச்சி என ஒதுக்கப்பட்டு, தனித்திறமையுடன் வழங்குகிறோம். இதில் 2 நிகழ்ச்சிகள் எனக்கு பெரிய உந்துசக்தியாக இருக்கின்றன.

முதலாவது, டெலிபோன் காலர்கள் பங்கேற்கும் ‘ஃப்ரீயா வுடு’ நிகழ்ச்சி. மாநிலம், நாடு என எல்லை கடந்து ரசிகர்கள் பங்கேற்பதும், வலைதளங்கள் வழியாக பாராட்டுவதும் மகிழ்ச்சியாக உள்ளது. 2-வது, ‘கோலிவுட் சென்ட்ரல் 2.0’ நிகழ்ச்சி.

இதன் மூலம் மஞ்சு வாரியர் போன்ற சினிமா பிரபலங்களை சந்தித்து நேர்காணல் செய்வது இன்னொரு வகை கொண்டாட்டம்’’ என்கிறார் நிவேதிதா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x