கெளதம் மேனனைச் சொல்கிறாரா எல்ரெட் குமார்? - மீண்டும் உருவாகும் சர்ச்சை

கெளதம் மேனனைச் சொல்கிறாரா எல்ரெட் குமார்? - மீண்டும் உருவாகும் சர்ச்சை
Updated on
1 min read

எல்ரெட் குமார் வெளியிட்டுள்ள ட்வீட், கெளதம் மேனனைத் தான் சொல்கிறார் என்று பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

கெளதம் மேனன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’. ஒன்றாக எண்டெர்டெயின்மென்ட் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை முதலில் தயாரித்தது. ஆனால், பைனான்ஸ் சிக்கலால் பலமுறை இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு வந்தது.

இறுதியாக, வேல்ஸ் நிறுவனம் இந்தப் படத்தின் மீதான அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வெளியிட்டுள்ளது. இதற்காக வேல்ஸ் நிறுவனத்துக்கு 3 டங்கள் இயக்கவுள்ளார் கெளதம் மேனன். கடும் போராட்டத்துக்குப் பிறகு 'எனை நோக்கி பாயும் தோட்டா' வெளியாகியுள்ளதால், படக்குழுவினருக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

பல வருடங்களுக்குக் கழித்து 'எனை நோக்கி பாயும் தோட்டா' வெளியாகியுள்ளதால், ஐசரி கணேசிற்கு வாழ்த்து தெரிவித்தார் வருண் மணியன். அதில், தமிழ் திரையுலகில் தான் பணம், நேரம், உறவுகள் ஆகியவற்றை இழந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார் வருண் மணியன்.

வருண் மணியனின் இந்த ட்வீட்டைக் குறிப்பிட்டு தயாரிப்பாளர் எல்ரெட் குமார், "ஐசரி கணேஷை கடவுள் ஆசிர்வதிக்கட்டும். அவரிடமிருந்தும் காக்கட்டும்" என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இவர் மறைமுகமாக கெளதம் மேனனைத் தான் தெரிவித்துள்ளார் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

பின்னணி என்ன?

எல்ரெட் குமாரின் தயாரிப்பு நிறுவனமான ஆர்.எஸ் இன்ஃபொடையின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் 'நீதானே என் பொன்வசந்தம்' என்னும் படத்தை இயக்கினார் கெளதம் மேனன். ஜீவா, சமந்தா உள்ளிட்ட பலர் நடித்த அந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. அந்தச் சமயத்தில் கெளதம் மேனன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் எல்ரெட் குமார். அதனை மனதில் வைத்தே இவ்வாறு மறைமுகமாக ட்வீட் செய்திருப்பதாகக் கருதப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in