‘தங்கமகன்’, ‘அடுத்த வாரிசு’, ‘பாயும் புலி’... ஒரே வருடத்தில் அடுத்தடுத்து ஹிட்! 

‘தங்கமகன்’, ‘அடுத்த வாரிசு’, ‘பாயும் புலி’... ஒரே வருடத்தில் அடுத்தடுத்து ஹிட்! 
Updated on
2 min read

83-ம் ஆண்டில், ரஜினிகாந்துக்கு வரிசையாகப் படங்கள் குவிந்தன. ஐந்து படங்கள் ரிலீசாகின. இதில் ஐந்து படங்களும் கல்லா கட்டின. என்றாலும் மூன்று படங்கள், மிக முக்கிய இடத்தைப் பிடித்தன.


83-ம் ஆண்டின் தொடக்கமாக, பொங்கலையொட்டி, ஜனவரி மாதம் 14-ம் தேதி ஏவிஎம் தயாரிப்பில், ரஜினி நடித்த ‘பாயும் புலி’ வெளியானது. முந்தைய வருடமான 82-ம் ஆண்டில், ரஜினிகாந்த், ‘புதுக்கவிதை’, ‘தனிக்காட்டு ராஜா’, ‘எங்கேயோ கேட்ட குரல்’, ‘மூன்று முகம்’, ரங்கா’ என படங்கள் வந்தன. ‘புதுக்கவிதை’யும் ‘தனிக்காட்டுராஜா’வும் காதல், தோல்வி என அமைந்திருந்தன. ‘எங்கேயோ கேட்ட குரல்’ ரஜினியின் நடிப்பை வெளிக்காட்டிய படமாக அமைந்தது. தேவர்பிலிம்ஸின் ‘ரங்கா’வும் ‘மூன்று முகம்’ படமும் ரஜினியின் அக்மார்க் படமாக அமைந்திருந்தன.


அதேபோல், 83-ம் ஆண்டின் தொடக்கத்தில், முதல் படமாக வந்தது ‘பாயும்புலி’. ஏவிஎம் தயாரித்தது. எஸ்.பி.முத்துராமன் இயக்கம். இளையராஜா இசை. முதல் பாதியில் அப்பாவியாகவும் அதன்பிறகு வீரதீரனாகவும் நடித்திருந்தார் ரஜினி. ராதா ஜோடி. ‘முரட்டுக்காளை’ அளவுக்குப் போகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், போட்ட முதலுக்கு மோசமில்லாமல், நன்றாகவே கலெக்‌ஷனானது.


பிறகு மார்ச் 4ம் தேதி,ஸ்ரீதர் இயக்கத்தில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசையில், ரஜினி நடித்த ‘துடிக்கும் கரங்கள்’ வெளியானது. இதையடுத்து, ரஜினியின் ‘தாய்வீடு’ வெளியானது. இது தேவர்பிலிமஸ்.


ஜூலை 7 -ம் தேதி ‘அடுத்த வாரிசு’ வெளியானது. ரஜினி, ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா நடித்திருந்தனர். இளையராஜா இசை. எல்லாப் பாடல்களும் சூப்பர் ஹிட். ‘ஆசை நூறு வகை’, ‘பேசக்கூடாது’, ‘காவிரியே கவிக்குயிலே’ முதலான பாடல்கள் ரசிகர்களை தியேட்டருக்கு வரச் செய்தன. இதில், ‘ஆசை நூறு வகை’ பாடல் எப்போது கேட்டாலும் எங்கு கேட்டாலும் எழுந்து ஆடச்செய்யும் பாடலாக அமைந்தது.


இதன் பின்னர், நவம்பர் 4-ம் தேதியன்று வெளியானது ’தங்கமகன்’. இந்தப் படத்தை சத்யா மூவீஸ் ஆர். எம். வீரப்பன் தயாரித்தார். இதில் பூர்ணிமா பாக்யராஜ் முதலானோர் நடித்தார்கள். இளையராஜா இசை. எல்லாப் பாடல்களும் சூப்பர் ஹிட். ’ராத்திரியில் பூத்திருக்கும்’ முதலான பாடல்களெல்லாம் இன்றைக்கும் இரவுப் பாடல்களாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன.


இதில் ’பாயும்புலி’யின் பாடல்களும் செம ரகம். ‘பாயும் புலி’, ‘துடிக்கும் கரங்கள்’ இரண்டு படங்களிலும் ராதா நாயகியாக நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களில் ‘துடிக்கும் கரங்கள்’ படத்தை விட ‘பாயும் புலி’ அதிக நாட்கள் ஓடின. வசூலும் தந்தது.


எல்லாப் படங்களையும் தூக்கிச் சாப்பிட்டது ‘தங்க மகன்’ படம் தான். மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது. கமலுக்கு ‘சட்டம்’ படமும் ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படமும் மட்டுமே வந்து இரண்டு படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தன. இதில் ‘தூங்காதே தம்பி தூங்காதே’ பிரமாண்ட வெற்றியைப் பெற்றது.


ரஜினிக்கு ‘தங்கமகன்’, ‘பாயும்புலி’ இரண்டும் ஹிட்டடித்தது. அதேசமயம், எந்தப் படமும் நஷ்டத்தைக் கொடுக்கவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in