

நடிகர் சங்கத்துக்கு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் சங்கம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத் தின் அன்றாட நிர்வாகப் பணி களை கவனிப்பதற்காக பதிவுத் துறை உதவி ஐ.ஜி. கீதா சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து நடிகர் சங்கம் மற்றும் அதன் பொருளாளரான நடிகர் கார்த்தி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது.
நடிகர் சங்கம் தரப்பில், ‘‘நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு ஏற்கெனவே உயர் நீதி மன்றத்தில் நிலுவையில் இருக் கும்போது, நடிகர் சங்கத்துக்கு சிறப்பு அதிகாரியை நியமித்தது சட்டவிரோதம்’’ என்று வாதிடப் பட்டது.
‘‘நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் ஏற்கெனவே காலாவதி ஆகிவிட்ட நிலையில் இந்த வழக்கு, விசாரணைக்கு உகந்தது அல்ல’’ என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
வாதங்களை கேட்ட நீதிபதி, தேதி குறிப்பிடாமல் வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்தார்.