

‘‘கால்பந்து தொடர்பான களம் என்ற காரணத் தால் ‘பிகில்’ படமும், எனது ‘ஜடா’ படமும் ஒரே கதை என்று பலரும் விமர்சித்தனர். பிரம் மாண்டமாக படமாக்கப்பட்ட படம் ‘பிகில்’. வட சென்னையில் கால்பந் தாட்ட விளையாட்டில் நடக்கும் ஒரு சின்ன அரசியலை சொல்வதே ‘ஜடா’. அதனால், இரண்டுக்கும் கொஞ்சம்கூட சம்பந்தம் இல்லை” என்று விளக்கம் அளித்த வாறே பேசத் தொடங்குகி றார் அறிமுக இயக்குநர் குமரன். அவருடன் பேசிய தில் இருந்து..
‘ஜடா’ உண்மைக் கதையா?
அப்படி சொல்ல முடியாது. வடசென்னை யின் சுவாரஸ்யங்களில் ஒன்று அங்கு நடக்கும் கால்பந்தாட்ட போட்டிகள். சிறு வயதில் இருந்து அதை பார்த்திருக்கிறேன். ரொம்ப பரிச்சய மானது, நெருக்கமானது என்ப தால் ரசித்து, உணர்ந்து எழுதியிருக் கேன். நானும் ஒரு கால்பந்தாட்ட வீரன் என்பதால், நான் வாழ்ந்த வாழ்க்கையை சுவாரஸ்யப்படுத்தி எழுதியிருக்கேன். இந்த பின்னணி கொண்ட படம், தமிழ் சினிமாவுக்கு புதிது. அதுதான் படத்தின் பிளஸ். தொடக்கம் முதல் முடிவு வரை கால்பந்துதான் களம். ஆனால், திரைக்கதை புதிதாக இருக்கும். அதற்குள் சிறு அரசியல் வைத் துள்ளேன்.
டிரெய்லர் பார்க்கும்போது திகில் படம் போல தெரிகிறதே..
பேய் படம் போல பயமுறுத்து வது எல்லாம் இருக்காது. ஆனால், நிறைய வியக்கத்தக்க விஷயங்கள் இருக்கும். அதுவே பயத்தை உண்டாக்கும்.
நாயகனாக கதிரை எப்படி தேர்வு செய்தீர்கள்?
கதைக்கு யார் தேவையோ, தேர்வு செய்துகொள்ளுங்கள் என்று தயாரிப்பாளர்கள் கூறிவிட்டனர். இந்த கதைக்கு கதிர் பொருந்துவார் என்று தோன்றி யது. கதிர் நல்ல படங்கள் பண்ணு வார் என்ற பெயர் உள்ளது. அதேபோல, கதையை அவர் தேர்வு செய்யும் விதமும் பிடித்ததால், அவர்தான் நாயகன் என்று முடிவு செய்தேன். ‘அறிமுக இயக்குநர் தானே’ என்று எந்த ஒரு சூழலிலும் அவர் நினைக்கவே இல்லை. 3 மாதங்களுக்கு தினமும் காலை 6 மணிக்கு எழுந்து மைதானத்துக்கு வந்து பயிற்சி செய்தார். கால்பந்து குறித்த சூட்சுமங்களை நான் கூற, ரொம்ப மெனக்கிட்டு கற்றுக்கொண்டார்.
மற்ற நடிகர்கள் குறித்து..
கதைக்காக பணிபுரியும் நடிகர் களாகவே அனைவரையும் தேர்வு செய்தேன். யோகி பாபு, ஓவியர் ஏ.பி.தர், ‘அடங்காதே’ இயக்கு நர் சண்முகம் முத்துசுவாமி, லிங் கேஷ், நிஷாந்த், அறிவுபாலா என பலரும் சிறப்பாக நடித்துள்ளனர். நான் சொல்வதைவிட, ஒரு படி மேலே போய் பண்ணனும் என நினைக்கிற நடிகர்கள், என் முதல் படத்தில் அமைந்ததில் ரொம்பவே சந்தோஷம். யாரிடமும் உதவி இயக்குநராக பணிபுரியாத, சினிமா பின்னணி இல்லாத ஒரு பையனின் கதையை நம்பி, படத்தை தயா ரித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி.
முதல் பட அனுபவம் பற்றி..
இயக்குநராக களமிறங்கும் முன்பு நிறைய அவமானங்களை சந்திக்க வேண்டி இருந்தது. யாரிட மாவது உதவி இயக்குநராக சேரப் போனால்கூட ‘சொல்றேன்பா’ என்று கூறி அனுப்பிவிடுவார்கள். இல்லாவிட்டால், ‘நடிக்கிறியா?’ என்று கேட்டு நிற்கவைப்பார்கள். 6 ஆண்டுகள் இதை எல்லாம் தாங்கிய பிறகு, இயக்குநர் ஆகியுள் ளேன். சில இடங்களில் நான் கதை சொன்னபோது, ‘இதை மாற்று.. அதை மாற்று.. கிளாமர் பாட்டு வைக் கணும்..’ என்றார்கள். அனைத்தை யும் தாண்டி, கதைக்கு சமரசம் செய்துகொள்ளாமல் இந்த படம் பண்ணியிருக்கேன்.