குடிப்பது போல் நடிக்காதீர்கள்: பெரிய ஹீரோக்களுக்கு ஜாக்குவார் தங்கம் வேண்டுகோள் 

குடிப்பது போல் நடிக்காதீர்கள்: பெரிய ஹீரோக்களுக்கு ஜாக்குவார் தங்கம் வேண்டுகோள் 
Updated on
1 min read

தயவுசெய்து பெரிய ஹீரோக்கள் எல்லாம் குடிப்பது போல் நடிக்காதீர்கள் என்று ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ் இயக்கத்தில் உருவான படம் 'எதிர்வினையாற்று'. இதில் அலெக்ஸ், சனம் ஷெட்டி, ஆர்.கே.சுரேஷ், ஆடுகளம் நரேன், சம்பத் ராம், அனுபமா குமார், லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் நாயகன் அலெக்ஸ், சனம் ஷெட்டி, ஆர்.கே.சுரேஷ், சம்பத்ராம், லட்சுமி பிரியா, ஒளிப்பதிவாளர் மனோஜ் நாராயணன், தயாரிப்பாளர் தனஞ்செயன், விஜிபி சந்தோஷம், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இதில் ஜாக்குவார் தங்கம் பேசும்போது, ''இந்தப்படத்தை 24 நாட்களில் எடுத்தது மிகப்பெரிய சாதனை. இப்படத்தின் ட்ரெய்லரை ஒரேநாளில் கட் செய்திருக்கிறார்கள். அதற்காகவே பெரிய வாழ்த்துகள். தாயின் அருள் என்பது மிகப்பெரிய விஷயம். அந்த அருள் அலெக்ஸுக்கு கிடைத்துள்ளது.

முத்தக்காட்சிகள் எல்லாம் இப்போது சாதாரணமாகி விட்டது. இப்படத்தில் லிப் லாக் காட்சியில் சனம் ஷெட்டி சிறப்பாக நடித்துள்ளார். சிம்புகூட நயன்தாரா லிப் லாக் சீனில் நடித்த பிறகுதான் பெரிய அளவில் ரீச் ஆனார். அதனால் முத்தக் காட்சிகள் தவறில்லை. குடிப்பது போல காட்சிகள் வைப்பது தான் தப்பு. தயவுசெய்து பெரிய ஹீரோக்கள் எல்லாம் குடிப்பது போல் நடிக்காதீர்கள். இப்படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியடையும்’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in