

ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் ஆகிய சேனல்களில் கிரிக்கெட் வர்ணனையாளராக களத்தில் அசத்தி வரும் தொகுப்பாளினி பாவனா சமீபத்தில் ‘லக்ஸுரி அஃபெயர்ஸ்’ விருது பெற்றிருக்கிறார்.
‘‘பொழுதுபோக்கு சேனல்களில் நிகழ்ச்சி வழங்குவதால் மட்டுமே மக்களின் கவனத்தைக் கவர முடியும் என்ற எண்ணத்தை தகர்த்து, எனது கிரிக்கெட் கேரியர் பணிக்காக இந்த விருது கிடைத்திருப்பது பெருமையாக உள்ளது.
இன்றைய சூழலில் கிரிக்கெட் விளையாட்டை தொகுத்து வழங்கும் ஒரே பெண் என்ற அடையாளம் எனக்கு மிகப் பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.
இன்ஸ்டாகிராம் உட்பட பல தளங்களில், ‘‘ஏன் டான்ஸ், பாட்டு நிகழ்ச்சிகளில் பாவனாவை பார்க்க முடியவில்லை?’’ என்று கேட்கின்றனர். ‘‘கிரிக்கெட் வர்ணனையில் பிஸியாக இருப்பதால் சேனலில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை.
மற்றபடி, வெளியே மேடை நிகழ்ச்சிகளில் பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சிகளை வழங்கவே செய்கிறேன். விரைவில் எனது 4-வது மாஷ்-அப் ஆல்பம் தயாராக உள்ளது. கடந்தமுறை இந்தி மொழியில் இருந்தது. இம்முறை தமிழ் பாடலின் அம்சம் நிறைந்ததாக இருக்கும்’’ என்கிறார் பாவனா.