

'ஆதித்ய வர்மா' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகும் துருவ் விக்ரமிற்கு கார்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சந்தீப் வாங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'அர்ஜுன் ரெட்டி'. இதன் இந்தி ரீமேக்கும் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்க 'ஆதித்ய வர்மா' என்ற பெயரில் உருவாகியுள்ளது.
'அர்ஜுன் ரெட்டி' படத்தில் முதல்நிலை உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கிரிசாய்யா இயக்கியுள்ளார். பனிடா சாந்து, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் துருவ் விக்ரமுடன் நடித்துள்ள இந்தப் படம் நாளை (நவம்பர் 22) வெளியாகவுள்ளது.
இந்நிலையில், தமிழ் சினிமாவுக்கு துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகவுள்ளதற்கு கார்த்தி தனது ட்விட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கார்த்தி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
சினிமா துறையில் துருவ் விக்ரமின் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள். உங்களுடைய கடின உழைப்பையும், உங்களுடைய அதீத பொறுமையையும் நாங்கள் பார்க்கிறோம். உங்களை வேறு தளத்துக்குக் கொண்டு செல்லும் சரியான வாகனமாக ’ஆதித்ய வர்மா’ இருக்கும். உங்கள் தந்தையை விட அதிக இதயங்களை நீங்கள் வெல்ல வேண்டும். மிகப்பெரிய வெற்றிபெற ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்
இவ்வாறு கார்த்தி தெரிவித்துள்ளார்.