நானும் கமலும் இணைந்தால் யார் முதல்வர் வேட்பாளர்?- ரஜினி பதில்

நானும் கமலும் இணைந்தால் யார் முதல்வர் வேட்பாளர்?- ரஜினி பதில்
Updated on
1 min read

நானும் கமலும் இணைந்தால் யார் முதல்வர் வேட்பாளர் என்ற கேள்விக்கு ரஜினி பதிலளித்துள்ளார்.

கோவாவில் நடைபெற்று வரும் 50-வது சர்வதேச திரைப்பட விழாவில் நேற்று ரஜினிக்கு "'ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி' என்ற மத்திய அரசின் சிறப்பு விருது வழங்கப்பட்டது. அந்த விழாவில் கலந்துகொண்டு இன்று (நவம்பர் 21) மாலை சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்.

அப்போது சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் மத்தியில் ரஜினி பேசும்போது, "முதலில் நேற்று வாங்கிய விருதுக்குத் தமிழக மக்கள்தான் காரணம். அதைத் தமிழக மக்களுக்கே சமர்ப்பிக்கிறேன்" என்று தன் பேச்சைத் தொடங்கினார் ரஜினி. அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

நீங்களும் கமலும் இணைந்து பணியாற்றுவோம் என்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படியென்றால் யார் முதல்வர் வேட்பாளர் என்ற கேள்வி வருகிறதே..

அது வந்து தேர்தல் நேரத்தில் அப்போது இருக்கும் சூழ்நிலையில் எடுக்க வேண்டிய முடிவு. நான் கட்சி ஆரம்பிக்கும் போது, கட்சி உறுப்பினர்கள் எல்லாம் ஒன்றிணைந்து எடுக்க வேண்டிய முடிவு. அப்போது சொல்கிறேன். அதுவரைக்கும் இதுகுறித்துப் பேச விரும்பவில்லை.

தமிழக அமைச்சர்கள் நீங்களும் கமலும் இணைவதை விமர்சனம் செய்து வருகிறார்களே?

2021-ம் ஆண்டு அரசியலில் தமிழக மக்கள் அற்புதத்தை, அதிசயத்தை 100க்கு 100 சதவீதத்தை நிகழ்த்துவார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in