திரை விமர்சனம்: சங்கத்தமிழன்

திரை விமர்சனம்: சங்கத்தமிழன்
Updated on
2 min read

மருதமங்கலம் கிராமத்தில் தாமிர உருக்காலை அமைக்கத் துடிக் கிறது ஒரு கார்ப்பரேட் நிறு வனம். அதனால் வரப்போகும் சூழல் சீர்கேட்டை அறிந்து, ஆலை வரக் கூடாது என்று ஊர் மக்கள் வழக்கு தொடுக்கின்றனர். இதற்கிடையே சென்னையில் சினிமாவில் நடிக்க முயன்றுவரும் முருகனுக்கும் (விஜய் சேதுபதி) உருக்காலை அதிபரின் மகளான கமாலினிக்கும் (ராஷி கன்னா) காதல் மலர்கிறது. மகளின் காதலனை நேரில் பார்க்கும் ஆலை அதிபர், ‘‘அது முருகன் அல்ல; தமிழ்’’ என்று அலறுகிறார். அவர்கள் யார், உருக்காலை தொடங்கப்பட்டதா என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தருகிறது ‘சங்கத்தமிழன்’.

சுற்றுச்சூழலுக்கும், மனிதர்களுக் கும் கேடு விளைவிக்கும் ஆலை பற்றிய சீரியஸான விஷயத்தை நகைச்சுவை கலந்து சொல்ல முயன் றிருக்கிறார் இயக்குநர் விஜய் சந்தர். அதுதான் பயங்கர காமெடி. படத் தின் முதல் பாதியில் அங்கொன் றும் இங்கொன்றுமாக என்னவெல் லாமோ நடைபெறுகிறது. அதற் கான காரணங்களை எல்லாம் படத் தின் பின்பாதியில்தான் அறிய முடி கிறது. விஜய்சேதுபதியின் கால்ஷீட் இருந்தால் போதும்.. திரைக்கதை யாவது, மண்ணாங்கட்டியாவது என்று இயக்குநர் நினைத்துவிட்டார் போல. 80-களின் மசாலா படங்கள் போல, சராசரியான சம்பவங்களால் உருவாக்கப்பட்டுள்ள படத்தில் கொட் டாவிகளைத் தவிர்க்க முடியவில்லை.

படம் நெடுகிலும் சிறிதும் நம்பகத் தன்மை இல்லாமல் ஏராளமான சரடுகள். ‘முருகனும், சங்கத்தமிழனும் ஒருவரே’ என சின்னப்பிள்ளைகூட ஊகித்து கண்டுபிடித்துவிடக்கூடிய அளவுக்கு, பலவீனமாகக் காட்டி யிருப்பது ரசிகர்களைக் குறைத்து மதிப்பிடும் அணுகுமுறை.

முருகனை, தமிழாக மருதமங் கலத்துக்கு அனுப்பி வைக்கிறார் வில்லன் சஞ்சய். ஆனால், தமிழ் போல முருகன் நடிப்பதாக ஒரு காட்சியைக்கூட காட்டாமல் இயக்கு நர் ஏமாற்றுகிறார். இதற்கு, வில்லன் மருதமங்கலத்துக்கு தமிழை அனுப்பி வைக்கும்வரை அவர் ஏன் காத்திருக்க வேண்டும் என்ற கேள் விக்கு விடை இல்லை.

சென்னையில் முருகனாக விஜய் சேதுபதி ஏன் நடிக்கிறார் என்பதற் கும் வலுவான காரணம் இல்லை. வில்லன் மகளை காதலித்துதான் லட்சியத்தை நிறைவேற்ற முடியும் என்ற லாஜிக் காலாவதி ஆகி பல காலம் ஆகிவிட்டதால், ரசிகர்கள் திரையரங்கில் நெளிகிறார்கள்.

விஜய் சேதுபதி, தமிழாக இருக் கும்போது, தேர்தலில் ஜெயித்து வந்ததும் கொல்லப்படுகிறார் நாசர். இடையில் விஜய் சேதுபதி முருக னாக நடித்து, பிறகு மீண்டும் மருத மங்கலத்துக்கு வந்து சங்கத்தமிழ னாக நடிக்கும்வரை அந்த ஊரில் இடைத்தேர்தலே நடக்காமல் இருக் கிறது. நிஜக் கதைக்கும் நிழல் கதைக்குமான காலத்தைச் சொல்லா மல் இருப்பதும் திரைக்கதையின் பெரும் ஓட்டைகளில் ஒன்று.

ஓர் ஊரில் முன்னாள் எம்எல்ஏ நினைத்தால் ரேஷன் பொருள் கிடைக் காது, தண்ணீர் வராது, மருத்துவ மனை செயல்படாது, அதற்கு மாவட்ட ஆட்சியரும் உடந்தை என்பதாக காட்டுவதைப் பார்க்கும்போது ரத்தக் கண்ணீரே வந்துவிடுகிறது.

இருமுறை பார்த்ததுமே ஒரு சாமா னிய, ஏழை இளைஞனை, தொழி லதிபர் மகள் காதலிப்பதாக சித்தரிப் பதையும் நம்ப முடியவில்லை.

ஒன்றுக்கு இரண்டு நாயகிகள் இருந்தும், படத்தில் ரசிக்கத்தக்க காதல் காட்சிகளுக்கும் பஞ்சம்தான். நகரத்தில் ராஷி கன்னா உடனான காதலை ஒப்பிடும்போது, கிராமத்தில் நிவேதா பெத்துராஜ் உடனான காதல் தேறுகிறது.

முருகன், தமிழ் என்னும் இரு தோற்றங்களில் வருகிறார் விஜய் சேதுபதி. வழக்கம்போல, இதிலும் பேசிக்கொண்டே இருக்கிறார். விஜய் சேதுபதி எத்தனை முறை தன் கண் ணாடியைக் கழற்றி எறிகிறார் என்று போட்டியே வைக்கலாம். காமெடி செய்கிறேன் பேர்வழி என சூரியு டன் அவர் சேர்ந்து செய்யும் அலப் பறைகள் சில இடங்களில் லேசான சிரிப்பையும், பல இடங்களில் கடுப்பையும் தருகின்றன.

வேல்ராஜ் ஒளிப்பதிவு கிராமத்தின் பசுமையைக் கண்ணுக்கு அழகாகக் காட்டுகிறது. இசை என்னும் பெயரில் விவேக் - மெர்வின் மிரட்டியுள்ளனர். அவ்வளவு சத்தம். முதல் காட்சியில் நுழைவதுபோல, படம் முழுவதுமே விஜய் சேதுபதி மாஸாக வருகிறார்; தமாஷாக இருக்கிறது.

சமூகத்தை பாதிக்கும் தீவிரமான பிரச்சினையை அழுத்தமாக சுட்டிக் காட்ட வேண்டிய படம், மிதப்பும் மேம்போக்குமான சித்தரிப்பு காரண மாக, அந்த கடமையில் இருந்து தவறுவதால், தங்கமாக மின்னி யிருக்க வேண்டிய இந்த சங்கத் தமிழன்.. சாதாரண தகரம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in