

சல்மான் கான் நடித்து வரும் 'ராதே' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் பரத் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
பிரபுதேவா - சல்மான் கான் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தபங் 3'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. டிசம்பர் 20-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
இதனிடையே, பிரபுதேவா - சல்மான் கான் கூட்டணி தங்களுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாகப் பணிபுரிந்து வருகிறது. 'ராதே' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நாயகியாக திஷா பதானி நடித்து வருகிறார் சல்மான் கான், சோகைல் கான் மற்றும் அதுல் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.
ரன்தீப் ஹோண்டா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் மூலமாக மீண்டும் பாலிவுட்டில் பரத் நடிக்கிறார். சல்மான் கானுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பரத்தின் அறிவிப்புக்கு அவரது திரையுலக நண்பர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்தப் படம் அடுத்த ஆண்டு ஈத் விடுமுறை நாட்களுக்கு வெளியாகவுள்ளது.
நஸ்ருதீன்ஷா, சன்னி லியோன் நடிப்பில் 2013-ம் ஆண்டில் வெளியான 'ஜாக்பாட்' எனும் பாலிவுட் படத்தில் பரத் நடித்தது குறிப்பிடத்தக்கது.