

நடிகர் கமல்ஹாசனின் 'தூங்காவனம்' படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் இந்தப் படத்துக்கு ஜிப்ராஜ் இசையமைக்கிறார்.
கமல்ஹாசன் பாடியுள்ள இந்தப் வைரமுத்து (தமிழில்) எழுதியுள்ளார். தெலுங்கு பதிப்புக்கான பாடலும் விரைவில் ஒலிப்பதிவு செய்யப்படும் என்று இயக்குநர் ராஜேஷ் செல்வா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தூங்காவனத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட வேலைகள் நடந்து வருகின்றனர். த்ரிஷா, பிரகாஷ்ராஜ், சம்பத், மதுஷாலினி, கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் பிரெஞ்ச் படமான 'ஸ்லீப்லேஸ் நைட்' படத்தின் ரீமேக் என சொல்லப்படுகிறது. 'தூங்காவனம்' தீபாவாளிக்கு திரைக்கு வரவுள்ளது.