இந்திரஜாவிடம் மன்னிப்பு கோரிய விஜய்

இந்திரஜாவிடம் மன்னிப்பு கோரிய விஜய்
Updated on
1 min read

'பிகில்' படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் குண்டம்மா என்று சொல்லி நடித்ததிற்காக இந்திரஜாவிடம் மன்னிப்பு கோரியுள்ளார் விஜய்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பிகில்'. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, கதிர், இந்துஜா, வர்ஷா பொல்லாமா, டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட் பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப் படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

'பிகில்' படம் மூலமாகத் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானார் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா. இந்தப் படத்தில் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் க்ளைமாக்ஸ் காட்சியில் விஜய் இந்திரஜாவைப் பார்த்து 'குண்டம்மா' என்று அவரைக் கோபப்படுத்துவதற்காகப் பேசுவார்.

பெண்கள் முன்னேற்றம் தொடர்பான கதையில் இப்படி விஜய் பேசுவது நியாயமா என்று கருத்து தெரிவித்து வந்தார்கள். இது தொடர்பாகவும் தங்களுடைய அதிருப்தியையும் வெளிப்படுத்தியிருந்தனர். தற்போது அவ்வாறு தன்னைப் பற்றிப் பேசியதற்காக விஜய் மன்னிப்பு கோரியதாக இந்திராஜா பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

அந்தப் பேட்டியில், ''என்னை குண்டம்மா என்று பேசுவதற்கு விஜய் சார் முதலில் தயங்கினார். படத்தின் காட்சிகளுக்கு அது தேவைப்பட்டதால் மட்டுமே அப்படி நடித்தார். எவ்வித சங்கடமும் இல்லாமல் நானும் நடித்தேன். ஆனாலும், அந்தக் காட்சி படமாக்கி முடிந்தவுடன் என்னிடம் வந்து 'குண்டம்மா' என்று சொல்லி நடித்ததற்கு மன்னிப்புக் கேட்டார்” என்று தெரிவித்துள்ளார் இந்திரஜா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in