லிங்குசாமி - லாரன்ஸ் இணையும் 'ரங்கஸ்தலம்' ரீமேக்?

லிங்குசாமி - லாரன்ஸ் இணையும் 'ரங்கஸ்தலம்' ரீமேக்?
Updated on
1 min read

லிங்குசாமி இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்கவுள்ள படம் தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ரங்கஸ்தலம்' படத்தின் ரீமேக் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் 2018-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'ரங்கஸ்தலம்'. சுகுமார் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் ராம் சரண், சமந்தா, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, ஆதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார்.

2018-ம் ஆண்டு வெளியான தெலுங்கு படங்களுள் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியது 'ரங்கஸ்தலம்'. சிறந்த ஆடியோகிராபி என்ற பிரிவில் தேசிய விருதும் இந்தப் படத்துக்குக் கிடைத்தது. இந்தப் படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து, இதன் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது.

தற்போது இதன் தமிழ் ரீமேக்கில் லாரன்ஸ் நாயகனாக நடிக்கவுள்ளார். லிங்குசாமி இயக்கவுள்ளார். லிங்குசாமி - லாரன்ஸ் இணைந்து படம் பண்ண நீண்ட நாட்களாகப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள். தற்போது இந்தக் கூட்டணி 'ரங்கஸ்தலம்' தமிழ் ரீமேக்கின் மூலம் இணைவது உறுதியாகியுள்ளது.

இதன் தயாரிப்பாளர் மற்றும் இதர நடிகர்கள் உள்ளிட்ட விபரங்கள் வரும் வாரத்தில் அறிவிக்கத் தயாராகி வருகிறது படக்குழு. தற்போது நடிகர்கள் தேர்வில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in