

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர் ‘சந்திரலேகா’. இதில், புதிய திருப்பமாக நடிகை வனிதா விஜயகுமார் நடிக்கிறார்.
பல படங்களில் நடித்துள்ள இவர், சமீபத்தில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி வழியே பரவலாக கவனம் ஈர்த்தார். இந்நிலையில், ‘சந்திரலேகா’ தொடர் மூலம் சின்னத்திரை தொடருக்கு அறிமுகமாகி உள்ளார். இத்தொடரில் சந்திராவாக நடிக்கும் ஸ்வேதா, கதைப்படி ஒரு பிரச்சினையில் சிக்குகிறார்.
அவரை அதில் இருந்து மீட்பதற்காக வனிதா நுழைகிறார். நடிகை வனிதாவாகவே அவர் வருகிறார். அவரது கதாபாத்திரம் பாசிடிவ்வாகவே அமைக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு மாத காலத்துக்கு இத்தொடரில் வனிதா வலம் வருவார் என்று கூறப்படுகிறது. விஜய் நடிப்பில் 1995-ல் வெளியான ‘சந்திரலேகா’ திரைப்படம் மூலம்தான் கதாநாயகியாக வனிதா அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.