

சென்னை
கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரையுலகப் பயணத்தை முன் னிட்டு வரும் 7-ம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் நடக்க உள்ளன. இதில் ரஜினிகாந்த், இளையராஜா உட்பட தமிழ், இந்தி, தெலுங்கு திரையுலகினர் பலரும் கலந்து கொள்கின்றனர்.
கமல்ஹாசன் குழந்தை நட்சத் திரமாக அறிமுகமான ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படம் (1960) வெளியாகி 60 ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில், கமலின் 60 ஆண்டு திரையுலகப் பய ணத்தை அவரது ரசிகர்கள் பல் வேறு விதமாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திரையுலகினர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
இதுதொடர்பாக கமல்ஹா சனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன் டர்நேஷனல் நிறுவனம் வெளி யிட்டுள்ள செய்தியில் கூறியிருப்ப தாவது:
கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7-ம் தேதி அவரது தந்தை டி.சீனிவாசனின் நினைவு தினம். இதையொட்டி, அவரது சொந்த ஊரான பரமக்குடியில் காலை 10.30 மணிக்கு சீனிவாசன் சிலை திறக்கப்பட உள்ளது. இதில் கமல்ஹாசன் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.
அடுத்த நாளான 8-ம் தேதி காலை 9.30-க்கு சென்னையில் உள்ள ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவ னத்தின் புதிய அலுவலகத்தில் கமல்ஹாசனின் திரையுலக குருவான இயக்குநர் கே.பாலசந்த ரின் சிலை திறக்கப்பட உள்ளது. இதில் பாலசந்தர் குடும்பத்தினர் கலந்துகொள்கின்றனர்.
அன்று மதியம் 3.30 மணிக்கு, மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை சத்யம் திரையரங்கில் ‘ஹே ராம்’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டு கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. இதில் கமல் பங்கேற்கிறார்.
மூன்றாவது நாளான 9-ம் தேதி கமலின் 60 ஆண்டுகால கலைப் பயணத்தை கொண்டாடும் விதமாக இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பல்வேறு நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் நடக்க உள்ளன.
கமல்ஹாசனின் 44 ஆண்டுகால நண்பரான நடிகர் ரஜினிகாந்த் உட்பட தமிழ், இந்தி, தெலுங்கு திரையுலகினர் பலரும் இதில் கலந்து கொள்கின்றனர்.
கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7-ம் தேதி அவரது தந்தை டி.சீனிவாசனின் நினைவு தினம். இதையொட்டி, அவரது சொந்த ஊரான பரமக்குடியில் காலை 10.30 மணிக்கு சீனிவாசன் சிலை திறக்கப்பட உள்ளது.