தமிழ் சினிமா
கமல் பிறந்தநாள் விழாவில் ரஜினி!
போபாலில் நடந்து வரும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வரும் கமல்ஹாசன், நவம்பர் 7- ம் தேதி சென்னையில் நடக்கவுள்ள அவரது பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள வருகிறார். கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரையுலகப் பயணத்தை மையமாகக் கொண்டு, இந்த பிறந்த நாள் விழாவை பெரிய அளவில் சிறப்பிக்க கமல் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்ளிட்ட கமல்ஹாசனின் நண்பர்கள் இந்த விழா ஏற்பாடுகளை முன்னின்று நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சக நடிகரும், கமல்ஹாசனின் 40 ஆண்டு கால நண்பருமான ரஜினிகாந்தும் கலந்துகொள்ளவிருக்கிறார். இதனால் இரு நடிகர்களின் ரசிகர்களிடையே இவ்விழா இன்னும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
