

விடைகொடுக்கக்கூட நாங்கள் அருகதையற்றவர்கள் என்று சுஜித் மறைவுத் தொடர்பாக இயக்குநர் சேரன் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித் இன்று (அக்.29) சடலமாக மீட்கப்பட்டான். மீட்கப்பட்ட குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு சவப்பெட்டியில் வைத்து சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சுஜித் மறைவுக்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி பல்வேறு திரையுலக பிரபலங்களும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள். அந்த வரிசையில் இயக்குநர் சேரனும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சுஜித் மறைவுத் தொடர்பாக இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பதிவில் "விழிப்புணர்வின் விதையானாய்.. விடைகொடுக்கக்கூட நாங்கள் அருகதையற்றவர்கள். முடிந்தால் மன்னித்துவிடு. இம்மண்ணில் பிறப்பித்த கடவுளை....." என்று தெரிவித்துள்ளார்.