இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளை முதலில் மூடவேண்டும்: கார்த்தி வேண்டுகோள்

இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளை முதலில் மூடவேண்டும்: கார்த்தி வேண்டுகோள்
Updated on
1 min read

இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளை முதலில் மூடவேண்டும் என்று நடிகர் கார்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருச்சி, மணப்பாறை நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் 2 வயது குழந்தை சுஜித், ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து 50 மணி நேரத்தைக் கடந்துள்ளது. அவரை பத்திரமாக மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

தமிழகத்தைச் சேர்ந்த பிரபலங்கள், பொது மக்கள், இணையவாசிகள் என அனைவருமே சுஜித் நலமுடன் திரும்ப பிரார்த்தனை செய்து வருவதாகத் தெரிவித்து வருகிறார்கள். தொடர்ச்சியாக #PrayforSurjith, #PrayforSujith, #PrayforSurjit ஆகிய ஹேஷ்டேக்குகளில் பலரும் சுஜித் நலமுடன் திரும்ப தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், குழந்தை சுஜித் தொடர்பாக நடிகர் கார்த்தி, "எத்தனை ஆண்டுகள்தான் இப்படி போர்வெல்லில் குழந்தைகள் விழுந்து கஷ்டப்படுவதைப் பார்த்துக்கொண்டே இருக்கப் போகிறோம் எனத் தெரியவில்லை. இதற்கு மிகவும் வலுவான சட்டம் தேவை. இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளைத் தேடி முதலில் மூடவேண்டும். சுஜித் மீண்டும் அவரது அம்மா கையில் சிரித்துக்கொண்டு இருக்க வேண்டிக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் கார்த்தி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in