

விஜய் - அட்லீ கூட்டணியில் நாளை ரிலீஸாகவுள்ள படம் ‘பிகில்’. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், ஜாக்கி ஷெராஃப், விவேக், இந்துஜா, வர்மா பொல்லம்மா, யோகி பாபு, ரெபா மோனிகா ஜான் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, அனைத்துப் பாடல்களையும் விவேக் எழுதியுள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் விஜய்.
இந்தப் படத்தின் புரமோஷனுக்காக ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தார் அட்லீ. அவற்றில், சில கேள்வி - பதில்கள் இங்கே...
கேள்வி: தனுஷ் கூட ஒரு படம் பண்ணுவீங்களா?
அட்லீ: தனுஷ் சாரின் மிகப்பெரிய ரசிகன் நான். கண்டிப்பாகப் பண்ணுவோம்.
கேள்வி: அஜித்தைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்க...
அட்லீ: அஜித் சார் மீது மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. என்னுடைய சமீபத்திய விருப்பங்கள் ‘விஸ்வாசம்’ மற்றும் ‘நேர்கொண்ட பார்வை’.
கேள்வி: உங்களுக்குப் பிடித்த விஜய் டயலாக்?
அட்லீ: எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்.
கேள்வி: ‘தளபதி 64’ படம் பற்றி என்ன நினைக்குறீங்க?
அட்லீ: லோகேஷ் கனகராஜின் ஒர்க் எனக்குப் பிடிக்கும். ‘கைதி’ மற்றும் ‘தளபதி 64’ படங்களுக்கு வாழ்த்துகள் நண்பா.
கேள்வி: ஜூனியர் என்.டி.ஆர். பற்றி சொல்லுங்க...
அட்லீ: அவர்மீது மிகப்பெரிய மரியாதையும், அளவில்லா அன்பும் உள்ளது. ஒவ்வொரு படத்துக்கும் என்னை அழைத்துப் பாராட்டுவார். என்னுடைய எல்லா ஒர்க்கும் அவருக்குப் பிடிக்கும். நாளைக்கு என்ன சொல்றார்னு பார்ப்போம்.
கேள்வி: படத்தின் ஒன்லைனைச் சொல்ல முடியுமா?
அட்லீ: ஹேப்பி பிகில் தீபாவளி நண்பா. நேத்து வரைக்கும் இது என் படம். இனிமே இது உங்க படம்.