

கலைஞர் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ‘தில்லு முல்லு’ என்ற புதிய நகைச்சுவை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதுகுறித்து சேனல் தரப்பினர் கூறியதாவது: வாரம் ஒரு ‘தீம்’, காமெடி தர்பார் என வலம் வரும் ‘தில்லு முல்லு’ அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்கும். கோபம், வெறுப்பு, ஆசை, துக்கம், ஆத்திரம், இயலாமை, என பல குணநலன்கள் எப்போது வேண்டுமானாலும் நம்மைச் சூழ்ந்துகொள்ளும். இவை அனைத்தையும் மறக்க வைக்கும் நகைச்சுவைதான் இந்நிகழ்ச்சியின் ஹைலைட் என்றனர்.
இதில் பிரபல நகைச்சுவை நட்சத்திரங்கள் சிங்கப்பூர் தீபன், முல்லை, கோதண்டம், கூல் சுரேஷ் மற்றும் அன்னலட்சுமி இடம்பெற்றுள்ளனர்.