

'பிகில்' ட்ரெய்லருக்கு ஷாரூக் கான் தொடங்கி பல்வேறு இந்தியத் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து மழையைப் பொழிந்து வருகிறார்கள்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'பிகில்'. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் தீபாவளி வெளியாகவுள்ளது. நயன்தாரா, கதிர், இந்துஜா உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். நேற்று (அக்டோபர் 12) மாலை 6 மணியளவில் இணையத்தில் 'பிகில்' படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.
இந்தப் படத்துக்கு ஷாரூக் கான் தொடங்கி பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு:
ஷாரூக் கான்: என் நண்பர்கள் அட்லீ, தளபதி விஜய், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள். லைக் எ சக் தே ஆன் ஸ்டெராய்ட்ஸ்
விக்னேஷ் சிவன்: இந்த ட்ரெய்லர் எதிர்பார்ப்புகளையும் கடந்து விட்டது. இயக்குநர் அட்லீ ஜி.கே.விஷ்ணுவிடமிருந்து வியத்தகு முயற்சி அதுவும் இந்த குறுகிய காலத்தில் மிகப்பெரிய ஒன்றை அளிப்பது சாதாரணமல்ல. ஏ.ஆர். ரஹ்மான் எப்போதும் போல் அபாரம். விஜய் சார் அச்சுறுத்தலாக இருக்கிறார். ஹேண்ட்சம், மாஸ், நயன்தாரா. தாறுமாறா ஒரு தரமான படம் ’பிகில்’
ரத்னகுமார்: ’பிகில்’ சத்தத்தில் தியேட்டர் ஸ்க்ரீனு கிழிய போகுது. ராயபுரம் ராயப்பனாக தளபதி வாவ். ஹாட்ரிக் வாழ்த்துக்கள் அட்லீ. இந்துஜா மிக்க மகிழ்ச்சி.
விக்ரம் பிரபு: இது முழுக்க முழுக்க விஜய் சாரின் படம், குழுவுக்கு வாழ்த்துக்கள்
அஞ்சனா ரங்கன்: ’பிகில்’ ட்ரெய்லர் வெறித்தனம். விஜய் சார்தான் எனக்கு எப்போதும் பிடித்த நடிகர், அவரது வெறித்தனமான ரசிகையாகவே எப்போதும் இருப்பேன்.
இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே: தேர்தல்கள் முடியும் வரை காத்திருக்க வேண்டுமா? எனக்குப் பிடித்த விஜய்யின் ’பிகில்' படத்தைப் பார்க்கக் காத்திருக்க முடியாது. விஜய் ரசிகர்களுக்கு இன்னொரு ட்ரீட்.
சிவகார்த்திகேயன்: ’பிகில்’ ட்ரெய்லர் கிராண்ட் மாஸ், தளபதி விஜய், ஏ.ஆர்.ரஹ்மான், அட்லீ, நயன்தாரா, ஆண்டனி ரூபன், கதிர் மற்றும் முழுக் குழுவுக்கும் என் வாழ்த்துக்கள்
ஹேமா ருக்மணி: ’பிகில்’ ட்ரெய்லர் முழுக்க வெறித்தனம். நம்ம தளபதி விஜய் வேற லெவல். தளபதி ரசிகர்களுக்கு விலைமதிப்பில்லா ’பிகில்’ தீபாவளி, எப்போதும் என்றும் தளபதி விசிறி
விஷ்ணு விஷால்: என்ன ஒரு அற்புதமான ட்ரெய்லர் நீங்கள் சாதித்த காட்சித் தரத்தில் வீழ்த்தப்பட்டேன். எந்த ரோல்களிலும் தளபதி கெத்து. நிச்சயம் பிளாக்பஸ்டர்தான்.
சிபிராஜ்: வெறித்தனம் ஓவர் லோடு! மரண வெயிட்டிங்
சாந்தனு: ’பிகில்’ ஏக், தோ, தீன் போட்றா வெடிய.. இந்த ஆட்டம் சும்மா வெறித்தனமா இருக்கப் போகுது. விஜய்யின் வயதான கெட் அப் மரண மாஸ், அட்லீ ப்ரோ அடிச்சு துவம்சம் பண்ணிட்டீங்க, புள்ளைங்க நாங்க வெயிட்டிங், போட்றா வெடிய.
தனஞ்ஜெயன்: ’பிகில்’ எல்லா விதத்திலும் பிரம்மாண்டம். ட்ரெய்லர் ஒவ்வொரு ஷாட்டிலும் அற்புதம். பாக்ஸ் ஆபீஸை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தப் போகிறார் விஜய். அட்லீ அமர்க்களமாகச் செய்துள்ளார்.
சதீஷ் கிருஷ்ணன்: என்னுடைய இதயம் அலறுவதை என்னால் கேட்க முடிகிறது. நன்றி அட்லீ. என்னுடைய ஒரே உயிர் தளபதி விஜய். காட்சிகள் டாப் கிளாஸ். இனிமே புட்பால்தான்.
கிருஷ்ணா: ட்ரெய்லர்னா இப்பிடிதான் இருக்கணும். ப்பாஆஆஆ.. வெறித்தனம். விஜய் அண்ணா மரண மாச். அட்லீ சார் மேஜிக் மீண்டும். ஊஹூ இந்த தீவாளிக்கு 10,000வாலா வெடிதான். ரெடி ஆகலாமா..
லோகேஷ் கனகராஜ்: ’பிகில்’ ட்ரெய்லர் செம்ம மாஸ் விஜய் நா சும்மாவா, குழுவுக்கு வாழ்த்துக்கள்
ராகவா லாரன்ஸ்: ’பிகில்’ ட்ரெய்லர் பிரம்மாண்டம், மாஸ் முழு நிறைவான காட்சிகள். நண்பா விஜய் லுக் கிளாஸ் அண்ட் மாஸ். இந்தப் படம் பெரிய வெற்றி பெற ராகவேந்திர சுவாமியிடம் பிரார்த்தனை செய்கிறேன். ஒட்டுமொத்த குழுவுக்கும் வாழ்த்துக்கள்.
மோகன் ராஜா: நடிகர் விஜய் மீதான என் நேசம் படத்துக்குப் படம் வளர்ந்து கொண்டே வருகிறது. இதுதான் அவரது மேஜிக். வாழ்த்துக்கள் டீம்.
சமந்தா: வெறித்தனம் நண்பா
ஆர்யா: வாழ்த்துக்கள் டார்லிங், நடிகர் விஜய் அண்ணாவின் வெறித்தனம், இந்த தீபாவளி நம் அனைவருக்கும் சூப்பர் டூப்பர்தான்,
கரண் ஜோஹர்: அட்லீ! என்ன ஒரு சிறப்பான ட்ரெய்லர்!!! பிளாக்பஸ்டர் என்று முழுதும் இதில் எழுதப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய ஹிட். தளபதி விஜய் மற்றும் குழுவுக்குப் பெரிய வாழ்த்துக்கள்.
ஹன்சிகா: வாவ்! ட்ரெய்லர் பிரமாதமாக வந்துள்ளது. தீபாவளி வரை காத்திருக்க முடியாது
விவேக் ஓபராய்: என்ன மாதிரியான பிரமாதமான ட்ரெய்லர்! தளபதி ரசிகர்களுக்கு முழு விருந்து தான் போங்கள். அட்லீ, விஜய், டீம் ’பிகில்’ தலைவணங்குகிறேன். பியூர் மாஸ், கிளாஸ்