ரஜினிகாந்த் இன்று இமயமலைக்கு பயணம்; கேதார்நாத், பத்ரிநாத், பாபாஜி குகைக்கு செல்கிறார்

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இமயமலை சென்ற ரஜினி. (கோப்புப் படம்)
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இமயமலை சென்ற ரஜினி. (கோப்புப் படம்)
Updated on
1 min read

மகராசன் மோகன்

சென்னை

ரஜினிகாந்த் 10 நாள் ஆன்மிகப் பயணமாக இன்று இமயமலைக்கு புறப்படுகிறார். அங்கு கேதார்நாத், பத்ரிநாத், பாபாஜி குகை ஆகிய இடங்களுக்கு சென்று தங்க திட்டமிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர் பார்’ திரைப்படம், வரும் பொங்க லுக்கு ரிலீஸாக உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மும்பையில் இப்படத்தின் படப் பிடிப்பு கடந்த சில மாதங்களாக முழு வீச்சில் நடந்து வந்தது. இதில் கவனம் செலுத்தி வந்த ரஜினிகாந்த் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பினார்.

இதற்கிடையே, இயக்குநர் சிவா, சன் பிக்சர்ஸ் கூட்டணியில் ரஜினியின் அடுத்த படமும் முடிவாகி, இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டுக்கு முன்பு வரை, ஒவ்வொரு படத்தின் படப் பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு செல்வதை வழக்கமாக கொண் டிருந்தார் ரஜினி. உடல்நலக் குறைவு உள்ளிட்ட சில காரணங் களால் அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர் இமயமலை பயணத்தை ரத்து செய்தார்.

8 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, கடந்த 2018 மார்ச் மாதத்தில் ‘காலா’, ‘2.0’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்ததும் இமயமலைக்கு சென்றார்.

பாபாஜி பக்தர்கள் தங்குவதற் காக ரிஷிகேஷில் இருந்து சுமார் 275 கி.மீ. தொலைவில் உள்ள துவாராஹாட்டில் தான் புதிதாக கட்டிக் கொடுத்துள்ள குருசரண் ஆசிரமத்தையும் அப்போது ரஜினி பார்வையிட்டார். அங்கு அவர் 2 நாட்கள் தங்கினார்.

அந்த பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியவர், அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘பேட்ட’ படத்தில் கவனம் செலுத்தினார். இந்த நிலையில் மீண்டும் தற்போது இமயமலை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

சென்னையில் இருந்து இன்று காலை 6.40 மணிக்கு விமானத்தில் புறப்படும் ரஜினி, இமயமலையின் அடிவாரமான உத்தராகண்ட் மாநி லம் டேராடூன் செல்கிறார். அங் கிருந்து அடுத்தடுத்த இடங்க ளுக்கு காரில் செல்ல திட்டமிடப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.

முழுக்க ஆன்மிக சுற்றுலாவாக அமையும் இப்பயணத்தில் கேதார் நாத், பத்ரிநாத் ஆகிய புனித தலங் களுக்கு அவர் செல்கிறார். துவாரா ஹாட் குருசரண் ஆசிரமத்தில் 3 நாட்கள் தங்கி, அடுத்து பாபாஜி குகைக்கு செல்லவும் திட்டமிட் டுள்ளார்.

இமயமலை பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியதும் இயக்குநர் சிவா படத்தில் ரஜினி கவனம் செலுத்த உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in