கலாய்.. கலாய்!

கலாய்.. கலாய்!
Updated on
1 min read

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ‘இவன் தந்திரன்’ என்ற அரசியல் கலாய் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. யூ-டியூப் ரசிகர்களால் கொண்டாடப்படும் வரவணை செந்தில் தொகுத்து வழங்குகிறார்.

‘‘இது அரசியல் நிலவரங்களை சூடா, கலகலப்பா வழங்கும் நிகழ்ச்சி. இதில் பெரும்பகுதி கலாய் கொண்டாட்டமாகத்தான் இருக்கும். ஒரு அரசியல் புள்ளிகளையும் நாங்கள் விட்டுவைப்பது இல்லை. அவர்கள் மேடைகளில் பேசுவது, ஊடகங்களில் கொடுக்கும் பேட்டிகள் ஆகியவற்றோடு, அவங்க பேசாத, தொடாத பல விஷயங்களையும் கற்பனையாக, கலகலப்பாக சேர்த்து தரும் ஜாலி நிகழ்ச்சி. இதில் என்னோடு, நக்கலைட்ஸ் மஞ்ச நோட்டீஸ் புகழ் ஜென்சன் திவாகர், முரசொலி மற்றும் ஆர்ஜே பாரு ஆகியோர் அரசியல் தலைவர்களாக அரிதாரம் பூசி வருகின்றனர். சமகால அரசியல்வாதிகள் தொடங்கி ஹிட்லர் வரை நையாண்டி செய்வதுடன், நீட், இந்தி போன்ற பிரச்சினைகளை நேரடியாக விமர்சிப்பதே இதன் சிறப்பு’’ என்கிறார் வரவணை செந்தில்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in