40 அடி உயரத்தில் கேம் ஷோ!

40 அடி உயரத்தில் கேம் ஷோ!
Updated on
1 min read

‘த வால்’ என்ற புதிய கேம் ஷோ இந்த வாரம் முதல் சனி, ஞாயிறு கிழமைகளில் விஜய் தொலைக்காட்சியில் தொடங்க உள்ளது.
‘வால்’ என்பது 40 அடி உயர பிரம்மாண்ட டிஜிட்டல் போர்டு. இதன் மேலே 7 துளைகள் இருக்கும். அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து வெள்ளை, பச்சை, சிவப்பு பந்துகளை ஆட்டத்துக்கு ஏற்றவாறு அதன் வழியே செலுத்த வேண்டும்.

பல்வேறு தடைகளைத் தாண்டி அந்த பந்துகள் கீழே வந்து விழுவதற்கேற்ப பரிசுத் தொகை நிர்ணயிக்கப்படும்.ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், நண்பர்கள் என 2 பேர் ஜோடியாக இணைந்து விளையாட வேண்டும். 3-வது சுற்றில் இருந்து இருவரும் பிரிக்கப்படுவார்கள். ஒருவர் ‘வால்’ முன்பு நின்றும், இன்னொருவர் தனி அறையில் இருந்தும், விளையாட்டை தொடர வேண்டும். கடைசியாக, தனி அறையில் இருக்கும் போட்டியாளரிடம் ஒப்பந்தக் கடிதம் தரப்படும்.

அவர் அதில் கையெழுத்து போடுகிறாரா, கிழித்துப் போடுகிறாரா என்பதைப் பொருத்து, பரிசுத் தொகையை அவர்கள் எடுத்துச்செல்ல முடியும். அதிர்ஷ்டமும் அறிவும் கைகொடுத்தால் ரூ.2.5 கோடி வரை வெல்லலாம். மாகாபா ஆனந்த், பிரியங்கா இருவரும் இணைந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in