

ஜீ தமிழ் தொலைக்காட்சி, ‘குடும்பம் விருதுகள் - 2019’ நிகழ்ச்சியை சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தி முடித்துள்ளது. இதில், ஜீ தமிழ் சிறந்த நடிகராக ‘சத்யா’ தொடர் விஷ்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே தொடரில் சத்யாவாக நடிக்கும் நாயகி ஆயிஷா, சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிறந்த தொகுப்பாளினியாக பிரியாராமன், சிறந்த வில்லியாக ‘யாரடி நீ மோகினி’ தொடர் சைத்ரா ரெட்டி, சிறந்த நடுவர்களாக ஸ்ரீனிவாஸ், ஸ்நேகா, சிறந்த தொகுப்பாளினியாக சாரா, சிறந்த ரியாலிடி நிகழ்ச்சியாக ‘சூப்பர் மாம்ஷோ’, சிறந்த தொடராக ‘சத்யா’ மற்றும் மனம்கவர்ந்த நடிகையாக சபானா (செம்பருத்தி), தொகுப்பாளினியாக அர்ச்சனா தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், தேவயானி, வாணி போஜன், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள், விருதுகள் வழங்கப்பட்டன. இது வரும் ஞாயிறு தொடங்கி, 3 வாரங்களுக்கு ஞாயிறுதோறும் ஒளிபரப்பாக உள்ளது.