

இயக்குநர்கள் சங்கத்துக்கு நிதியுதவியாக நடிகர் சூர்யா 10 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.
சமீபமாக தனது படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன், படக்குழுவினர் அனைவருக்கும் தங்கக்காசுகள் வழங்கி மகிழ்வித்து வருகிறார் சூர்யா. சுதா கொங்காரா இயக்கத்தில் நடித்த'சூரரைப் போற்று' படக்குழுவினர் அனைவருக்குமே தங்கக் காசுகள் கொடுத்துள்ளார்.
இதனைப் படக்குழுவினர் உறுதிப்படுத்தினார். முன்பாக, 'காப்பான்' படக்குழுவினருக்கும் சூர்யா கொடுத்துள்ளார். ஆனால், வெளியே சொல்லக் கூடாது எனக் கூறியதாகத் தகவல்கள் வெளியாகின.
இன்னும் சில நாட்களில் தீபாவளி வரவுள்ள நிலையில், அனைத்து அலுவலகத்தில் தீபாவளிப் பரிசு கொடுப்பது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க அறக்கட்டளைக்கும், இயக்குநர்கள் மற்றும் துணை இயக்குநர்கள் நல நிதியாகவும் சூர்யா 10 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.
இதற்கான காசோலையை இயக்குநர்கள் சங்கப் பொதுச் செயலாளர் இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரிடம் வழங்கியுள்ளார் சூர்யா. இதற்கு இயக்குநர்கள் சங்கம் சார்பில் சூர்யாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.